இவ்வளவு அன்பா!......- நெகிழ்ந்து போய் பதிவிட்ட ரவினா.

photo

மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஜோதி கதாபாத்திரத்தில் வில்லன் ரத்தின வேலின் மனைவியாக  நடித்த ரவினா; ரசிகர்களின் ஒப்பற்ற அன்பிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

photo

அதில், “ இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி” என பதிவிட்டுள்ளார். டப்பிங் கலைஞரான ரவினா தமிழில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதேப்போல மலையாளத்தில் ‘நித்யஹரித நாயகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த இவர் மாமன்னன் மூலமாக கொண்டாடப்படும் நடிகையாக பிரபலமாகியுள்ளார்.


 

தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆதிக்க வர்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் படமாக எடுக்கப்பட்ட மாமன்னன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ஓடிடி தளத்திலும் இந்தியாவில் டிரெண்டிங்கில் நம்பர் 1, உலக அளவில் டாப் 10 இடங்களில் ஒன்பதாவது இடம் என பல சாதனைகளை படத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story