காதலருடன் ஹனிமூன் ட்ரிப் சென்ற பிகில் நடிகை.. ஜாலி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் !

reba monica john

கணவருடன் ஜாலியாக ஹனிமூன் ட்ரிப் சென்ற நடிகை ரெபா மோனிகா ஜானின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. 

reba monica john

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ரெபா மோனிகா ஜான். கடந்த 2016-ஆம் ஆண்டு 'ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன்பிறகு 'ஜருகண்டி' என்ற படத்தில் நடித்தார். பின்னர் விஜய்யின் 'பிகில்' படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். 

reba monica john

இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் அதிக குவிந்து வருகிறது. இவர் நடிப்பில் வெளியான 'தனுசு ராசி நேயர்களே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் வரும் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது பிக்பாஸ் கவினுடன் இணைந்து உடன் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். 

reba monica john

இந்நிலையில் சமீபத்தில் தனது நீண்ட காதலரான ஜோமோன் ஜோசப்பை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து ஹனிமூனுக்காக வழக்கமாக நடிகைகள் செல்லும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு கணவருடன் இணைந்து மாலத்தீவின் அழகை ரசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கணவருடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

reba monica john

Share this story