உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் ரெபா மோனிகா ஜான்... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !
உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ரெபா மோனிகா ஜான் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ரெபா மோனிகா ஜான். கடந்த 2016-ஆம் ஆண்டு 'ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'ஜருகண்டி' என்ற படத்தில் நடித்தார். பின்னர் விஜய்யின் 'பிகில்' படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் அதிக குவிந்து வருகிறது. இவர் நடிப்பில் வெளியான 'தனுசு ராசி நேயர்களே', 'எஃப்.ஐ.ஆர்' உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதையடுத்து பிக்பாஸ் கவினுடன் இணைந்து ‘ஆகாஷ் வாணி’ வெப் சீரிஸிலும், இன்னும் சில தலைப்பு வைக்காத படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே கடநத் ஆண்டு தனது நீண்ட காதலரான ஜோமோன் ஜோசப்பை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ரெபா மோனிகா ஜான் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.