ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ரெஜினா கசாண்ட்ரா... வைரல் புகைப்படங்கள் !

நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், சக்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்றிருந்தார். இதையடுத்து ‘சூர்ப்பனகை’ என்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜிகுஜிகுயென ஜொலிக்கும் உடையணிந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.