‘அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு தயாராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கும்’ – ரெஜினா கூறிய அதிர்ச்சி தகவல்.

photo

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம்வருபவர் ரெஜினா. ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்த இவர் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், மிஸ்டர் சந்திர மௌலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியை தாண்டி ஏகப்பட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.  இந்த நிலையில் அவர் தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

photo

அதன்படி “சினிமாவில் வாய்ப்பு தேடிய சமயத்தில் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு தயாராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்றனர். அந்த சமயத்தில் அப்படியென்றால் என்ன என்றுகூட எனக்கு தெரியாது. நான் சம்பளத்தில் ஏதேனும் சமரசம் செய்யவேண்டும் போல என நினைத்தேன். பின்னர் எனது மேனேஜரிடம் கேட்டதற்கு அவர் படுக்கைக்கு அழைப்பதைதான் அப்படி கூறுகிறார்கள் என சொன்னார். நான் முடியவே முடியாது என கூறிவிட்டேன். இது நடந்து கிட்டதட்ட 10ஆண்டுகள் இருக்கும். இது போல எனக்கு மட்டுமல்ல சினிமாவில் பலருக்கும் நடந்துள்ளது. சிலர் உண்மையை கூறுகின்றனர் சிலர் நடக்காததை கூறுகின்றனர். யார் எப்படிபட்டவர் என சம்மந்தபட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும்” என கூறியுள்ளார் ரெஜினா கசாண்ரா.

Share this story