நான் என்ன ஒன் பெண்டாட்டியா... பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட 'இரவின் நிழல்' நடிகை!

rekha-nair-3

 நடிகை ரேகா நாயர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை சரமாரியாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல்  திரைப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

படத்தில் பிரிகிடா மற்றும் ரேகா இருவரும் நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தனர். படத்தில் ரேகா நாயர் கதாபாத்திரம் இறந்துவிட அதையறியாத அவரின் குழந்தை பால் குடிக்க அவரின் மார்பை கடிப்பது போல காட்சி இடம்பெற்றிருந்தது. படத்தில் இடம் பெற்ற இந்த மாதிரியான காட்சிகள் சர்ச்சை ஏற்படுத்தின. பாராட்டுகளும் கிடைத்தன.  

rekha nair

இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயரை மோசமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் பயில்வானை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வாக்கிங் செல்லும் வழியுல் ரேகா நாயர் அவரை வழிமறித்து சரமாரியாக பேசினார்.

“என்னப் பத்தி பேசினால் செருப்பு பிஞ்சிடும். நான் என்ன ஒன் பொண்டாட்டியா இல்ல மகளா? எதுக்கு என்ன பத்தி பேசுற… “ என கடுமையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 


 

Share this story