உடல் மெலிந்து காணப்படும் ரோபா சங்கர்... திடீரென என்னாச்சு ?... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

robo shankar

நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். முதன்முதலில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியால் புகழ்பெற்ற அவர் பன்முக திறமைக் கொண்டவர். 

robo shankar

சின்னத்திரைக்கு பிறகு சினிமாவிலும் கால்பதித்த அவர், காமெடி மற்றும் குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிநாட்டு கிளி ஒன்றை வீட்டில் வளர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் செலுத்தினார். 

robo shankar

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரோபோ சங்கருக்கு என்ன பிரச்சனை என்று சமூக வலைத்தளத்தில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இது குறித்து உண்மை தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி அவர் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் மெலிந்துள்ளார். விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Share this story