எலும்பும் தோலுமாய் மாறிய ரோபோ சங்கர்... புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி !

robo Shankar

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்படும் புதிய புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர். பல குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்த அவர், முன்னணி தொலைக்காட்சிகளில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலம் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். தனுஷின் 'மாரி' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். 

robo Shankar

ரோபோ சங்கரை பார்த்தாலே வெயிட்டான உருவத்துடன் இருப்பார். இப்படி இருந்துக் கொண்டு எப்படி சூப்பராக டான்ஸ் ஆடுகிறார் என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்புவது உண்டு. ஆனால் சமீபத்தில் அவரது உடல் எடை குறைந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினர்.‌

robo Shankar

இது குறித்து விளக்கமளித்த ரோபோ சங்கரின் மனைவி, சினிமா படம் ஒன்றில் நடிப்பதற்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் ரோபோ சங்கரின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் எலும்பும் தோலுமாய் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story