சாண்டா கிளாஸாக மாற்றுத்திறனாளிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா

சாண்டா கிளாஸாக மாற்றுத்திறனாளிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்த படத்தில் கிடைத்த நற்பெயரை வைத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. இதையடுத்து உழைப்பாளி, சூரியன், வீரா போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் ரோஜாவின் நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்தன. தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு ‌மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஆந்திர அரசியலில் நுழைந்தார். தற்போது ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.

சாண்டா கிளாஸாக மாற்றுத்திறனாளிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் வீட்டிற்கு சாண்டா கிளாஸ் வேடத்தில் அவர் சென்றுள்ளார். மேலும் அவரின் மகள்கள் படிப்பிற்காக 2 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்து உதவி செய்துள்ளார். 

Share this story