“மஞ்சக்காட்டு மைனாவா நீ” - நடிகை சதாவின் லேட்டஸ்ட் க்ளிக்

Sadha

 நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. 

sadha

‘ஜெயம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சதா. மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த அவர், மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.  தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.  

sadha

அந்நியன், உன்னாலே உன்னாலே, எலி, டார்ச்லைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 30-க்கும் மேற்பட்ட நடித்துள்ள அவர், வாய்ப்பு குறைந்ததால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். அதன்பிறகு சொந்தமாக மும்பையில் ஏர்த்லிங்ஸ் கஃபே என்ற ஓட்டலை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் கொரானா நேரத்தில் அவரின் ஒட்டல் நஷ்டமானது. 

sadha

சினிமாவை தவிர வைல்ட் லைஃப் போட்டோகிராபியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் 38 வயதாகும் சதா, தனது திரை வாழ்வின் 20 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற உடையில் இளமை ததும்ப இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

sadha

 

Share this story