“அந்த காட்சி என்னை மிகவும் பாதித்தது”- மோசமான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ‘சதா’.

தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து, தமிழில் அஜித்துடன் திருப்பதி, மாதவனுடன் இணைந்து பிரியசகி, வினய் உடன் உன்னாலே உன்னாலே, விக்ரமுடன் இணைந்து அந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழை கடந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிவாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகியிருந்த சதா, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்வில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது அவர் ‘தேஜா’ படத்தில் நடித்த போது வில்லன் அவரது கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்று காட்சி இடம்பெற்றிருந்தது. அது போன்ற காட்சியில் அவர் நடிக்க மாட்டேன் என மறுத்ததாகவும் ஆனால் இயக்குநர்தான் கட்டாயபடுத்தி நடிக்க வைத்ததாகவும். அதன்பின் வீட்டில் வந்து அழுதேன், அது மிகவும் மோசமான அனுபவம் என கூறியுள்ளார் சதா.