என் பிறப்பைக் குறிக்கும் நாள் என்பதைத் தாண்டி சிறப்பான நாள் ஆகிவிட்டது... நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சி!
நடிகை சாய் பல்லவி தனது பிறந்தநாள் குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகை சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பு மற்றும் மேக்கப் இல்லாத பொலிவான முகத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையை உயர்ந்துள்ளார் சாய் பல்லவி. அவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன.

இன்று நடிகை சாய் பல்லவி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர் நடித்து வரும் படங்களில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு வந்த வாழ்த்துக்களால் நெகிழ்ச்சியான சாய் பல்லவி உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"இன்று என் பிறப்பைக் குறிக்கும் நாள் என்பதைத் தாண்டி இந்த நாள் எனக்கு சிறப்பான ஒரு நாளாக அமைந்துவிட்டது. பூமியில் நான் கடந்த வந்த ஆண்டுகளைப் பார்க்கும்போது நான் மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். இந்த வாழ்க்கைக்காகவும், அனுபவங்களுக்காகவும், அன்புக்காகவும், கண்ணீராகவும், மகிழ்ச்சிக்காகவும், எனது ஆரோக்கியத்திற்காகவும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் என் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றியுள்ளீர்கள். நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.
— Sai Pallavi (@Sai_Pallavi92) May 9, 2022

