பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் வாழ்த்து !

நடிகை சாக்ஷி அகர்வால் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். ‘காலா‘ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட பிரபலத்தை வைத்து தற்போது மீண்டும் பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமாவில் அடுத்த வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறார். இதற்காக ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாக்ஷி அகர்வால், பிறந்தநாள் கொண்டாட்டின் புதிய போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.