“நம்பிக்கை மட்டும்தான் சூப்பர் ஹியூமனாக மாற்றும்” - ரசிகர்களுக்கு நடிகை சமந்தா அட்வைஸ் !

samantha

நம்பிக்கை தான் நம்மை சூப்பர் ஹியூமனாக மாற்றும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சமந்தா. முன்னணி நடிகர்கள் போல் சமந்தாவிற்கென்று ஒரு தனிக் கூட்டமே உள்ளது. பிசியான நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் உடல் நிலை தேறிய அவர், தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். 

samantha

இருப்பினும் தனது உடல்நிலை முழுமையாக குணமடைய வேண்டி பிரபல கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வருகிறார். அந்த வகையில் வட இந்தியாவில் உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பைரவ லிங்கத்தின் முன் தியானம் செய்யும் அவர், சில அறிவுரைகளை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். 

samantha

அதில், சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவை இல்லை. உங்களுக்கு நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அது எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருப்பதோடு, நல்ல ஆசிரியராகவும், நண்பராகவும் மாற்றும். ஆகவே நம்பிக்கை மட்டும் இருந்தால் போது அது உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்று என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவை ரசிகர்கள் லைக்  செய்து வருகின்றனர். 

 

 

Share this story