கேரள மாணவர் தற்கொலை விவகாரம் : நடிகை சமந்தா கண்டனம்

sam

கேரள மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக  நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். 


கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த 'ராக்கிங்' கொடுமையில் மிஹிர் அகமது என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், 'ராக்கிங்' கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி என் மனதை முற்றிலும்
நொறுக்கி விட்டது. இது 2025, ஆனாலும் ஒரு சில தனி நபர்கள் ஒருவருக்கு இழைத்த கொடுமையில் மற்றொரு இளைஞரின் வாழ்க்கையை நாம் இழந்து இருக்கிறோம். ராக்கிங்குக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ளன. இருப்பினும் மாணவர்கள் பேச பயப்படுகின்றனர். ஏனெனில் புகார் செய்வதால் பின்னால் ஏற்படும் விளைவுகளுக்கு பயப்படுகிறார்கள். யாரும் கேட்க மாட்டார்கள் என்ற பயத்தால் மவுனமாக
பாதிக்கப்படுகிறார்கள்.samantha

மிகிருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது பெற்றோருக்கு முடிவு கிடைக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கருணை, பயம், அடிபணிதல் ஆகியவற்றை கற்பிப்போம். 'ராக்கிங்' கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் மரணம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும். இந்த விவகாரத்தில் கிடைக்கும் நீதி என்பது வேறு எந்த மாணவர்களுக்கும் இதே வலியை ஏற்படுத்தக் கூடாத வகையில் அமைய வேண்டும். இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.

Share this story