இயக்குனருடன் காதலில் விழுந்தாரா நடிகை சமந்தா.. புகைப்படம் வைரல்...!

samantha

நடிகை சமந்தா, இயக்குனர்  ராஜ் நிடிமொரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், அவருடனான புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார். 


தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரைக் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார் சமந்தா. திருப்பதிக்குச் சென்று இருவரும் ஒன்றாக சாமி தரிசனம் செய்த வீடியோக்களும் வெளிவந்தன.சமந்தா சொந்தமாக டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அதன் முதல் தயாரிப்பான 'சுபம்' படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்திருந்தார். படத்தைப் பாராட்டி அவரது அம்மா பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ராஜ் நிடிமொருவின் தோளில் சாய்ந்துள்ள  ஒரு புகைப்படத்தையும் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் இருவரும் காதலில் இருப்பதை சமந்தா உறுதி செய்துள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. 'சுபம்' படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ராஜ் நிடிமொரு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story