மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவாய்... சமந்தாவிற்கு ஆறுதல் கூறிய உயிர் தோழி !

samantha with keerthy

 அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆறுதல் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்திருந்தார். 

samantha with keerthy

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் வெளியான ‘யசோதா’ டிரெய்லருக்கு அமோக வரவேற்பு இருந்தது. எனக்கு ஏற்படும் முடிவில்லாத சவால்களை சமாளிக்க உங்கள் அன்பு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இன்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் குணமடைந்த பிறகு உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்நோய் குணமடைய கொஞ்ச நாட்கள் ஆகும் என தெரிகிறது. விரைவில் நான் குணமடைவேன் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்னுடைய கணிப்புப்படி ஒரே நாளில் குணமடைவேன் என்று நினைக்கிறேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார். 

samantha with keerthy

இந்த பதிவை பார்த்த ரசிகர்களும், பிரபலங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தாவின் தோழியான நடிகை கீர்த்தி, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், உனக்கு நிச்சயம் அதிக சக்தி கிடைக்கும். விரைவில் வலிமையுடன் நலம்பெற்று திரும்புவாய் என்று தெரிவித்துள்ளார். 


 

 

Share this story