நியூ லுக்கில் சமந்தா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்
நடிகை சமந்தாவின் நியூ லுக் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா. இதையடுத்து தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். மூன்று மொழிகளில் நடித்து அவர், தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக மாறி இருக்கிறார். தமிழ் நடிகையாக இருந்தப்போதிலும் தெலுங்கில் தான் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகை வலம் வருகிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘யசோதா’ வரவேற்பை பெற்றுள்ள நிலையில் காவிய திரைப்படமாக உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ விரைவில் வெளியாகவுள்ளது. இதுதவிர விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வந்த அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சினிமாவிற்கு சிறிது காலம் ப்ரேக் எடுத்தார். தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ள அவர், குஷி மற்றும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வெவ்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.