சோகமான தோற்றத்தில் சமந்தா... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

samantha

சோகமான தோற்றத்தில் நடிகை சமந்தா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 

பிரபல நடிகையான சமந்தா, கடைசியாக நடித்து வந்த திரைப்படம் 'குஷி'. இந்த படத்தில் நடித்து வந்த போது மயோசிடிஸ்( தசை அயற்சி) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் சினிமாவிற்கு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு தற்போது சிகிச்சையில் உள்ளார். சமீபத்தில் வெளியான 'யசோதா' படத்தின் டப்பிங்கை கூட சிகிச்சை பெற்றுக்கொண்டே கொடுத்தார். 

samantha

இதையடுத்து யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது மிகவும் சோர்வாக காணப்பட்டார். தற்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வரும் சமந்தா, உயர் சிகிச்சைக்காக விரைவில் தென்கொரியா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிப்பிலிருந்து சில மாதங்கள் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 

samantha

இதற்கிடையே சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டப்பிங் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு நடிகை சமந்தா வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் மிகவும் உடல் மெலிந்து சோகமான தோற்றத்தில் காணப்பட்டார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story