“என் தியானமே வலிமையான ஆயுதம்” - ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தா !

samantha

ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்யும் புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வந்தார். ஆனால் தனது ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற அரிய நோய் பாதிப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் கொரியா நாடுகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். 

samantha

இந்நிலையில் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்யும் புகைப்படங்களை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற உடையில் கழுத்தில் மாலை அணிந்தவாறு மற்ற பக்தர்களுடன் அவர் அமர்ந்துள்ளார். 

samantha

இது குறித்து கூறியுள்ள அவர், தியானமே என் வலிமையின் ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சமந்தா, ஆன்மீக வழியில் நிம்மதியை தேடி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 

Share this story