அமெரிக்கா சென்றார் நடிகை சமந்தா... மயோசிடிஸுக்கு சிகிச்சை பெற முடிவு !

samantha

 நடிகை சமந்தா மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 

தென்னிந்தியாவில் க்யூட் நடிகையாக இருக்கும் சமந்தா, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி‘ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. 

samantha

இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வரும்போது நடிகை சமந்தாவிற்கு மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் கடந்த சில மாதங்களாக இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்த நிலையில் ‘குஷி’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்தார். அதோடு தற்போது ‘குஷி’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கிற்கு நடிகை சமந்தா சென்றுள்ளார். தனது தயாருடன் சென்றுள்ள அவர், அங்கு நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்கிறார். இதையடுத்து சில மாதங்கள் அங்கேயே தங்கவுள்ள சமந்தா, மயோசிடிஸ் சிகிச்சைக்காக சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார். முழு சிகிச்சை நிறைவுபெற்ற பின்னர்தான் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. 

 

 

Share this story