மயோசிடிஸ் சிகிச்சைக்கு 25 கோடியா ?.. யாரோ ஏமாத்துறாங்க.. சர்ச்சைக்கு பதிலளித்த சமந்தா !

samantha

மயோசிடிஸ் சிகிச்சைக்கு 25 கோடி செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில் சமந்தா விளக்கமளித்துள்ளார். 

சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை சமந்தா. பல மொழிகளில் நடித்து வரும் அவர், மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் சினிமாவிற்கு பிரேக் விட்டுள்ள சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சமந்தா, தனது உடல் நலம் குறித்து ரசிகர்களுக்கு அவ்வெவ்போது அப்டேட் கொடுத்து வருகிறார். 

samantha

இதற்கிடையே மயோசிடிஸ் சிகிச்சைக்காக 25 கோடி ரூபாய் தேவைப்பட்டதாகவும், அந்த தொகையை தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் நடிகை சமந்தாவிற்கு கடனாக கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. இது குறித்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் உலா வருகிறது. 

samantha

 இந்நிலையில் இணையத்தில் வெளியான வதந்திகளுக்கு நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கமளித்துள்ளார். அதில் எனது மயோசிடிஸ் சிகிச்சைக்கு 25 கோடி செலவா ? .. அப்படியென்றால் உங்களை யாரோ ஏமாற்றுகின்றனர். ஏனென்றால் அதை விட குறைவான பணத்தை தான் என் சிகிச்சைக்காக செலவு செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சினிமா வாழ்க்கையில் என் உழைப்பால் நான் அதிகம் சம்பாதித்துள்ளேன். அதனால் என்னை என்னால் பார்த்துக் கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

 மேலும் மயோசிடிஸ் என்பது ஒரு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகளை வெளியிடும்போது கொஞ்சம் பொறுப்புடன் இருங்கள். நோய் மற்றும் சிகிச்சை குறித்த பயத்தை விதைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

 

Share this story