படப்பிடிப்பில் காயம்.. சமந்தாவின் பதிவால் பதறிய ரசிகர்கள் !

samantha

‘சிட்டாடல்’ வெப் தொடரின் படப்பிடிப்பின் போது தனக்கு காயம் ஏற்பட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் மூலம் பிரபலமான ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கி வரும் புதிய வெப் தொடர் ‘சிட்டாடல்’.  இந்த வெப் தொடரின் இந்த வெப் தொடரில் சமந்தா மற்றும் வருண் தவான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா, மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 

samantha

சமீபத்தில் இந்த வெப் தொடருக்காக நைனிடால் என்ற இடத்திற்கு சமந்தா மற்றும் படக்குழுவினர் சென்றிருந்தனர். அங்கு 8 டிகிரி செல்சியஸ் குளிரில் நடிகை சமந்தா கடுமையான குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வந்தார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது. 

samantha

இந்நிலையில் தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில் கைகளில் ரத்த காயங்கள் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள அவர், சண்டைக் காட்சிகளின் போது கிடைத்த வெகுமதி என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது சண்டைக் காட்சி ஒன்று படமாக்கும் போது சமந்தாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story