பழனிக்கு கோயிலுக்கு நடந்தே சென்ற சமந்தா... சிறப்பு வழிப்பாடு நடத்தி வேண்டுதல் !

samantha

நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலுக்கு நடந்தே சென்று சிறப்பு வழிப்பாடு நடத்தினார். 

இந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடத்தி வருகிறார். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரது க்யூட்டான நடிப்பு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பை பெற்று வருகிறது. 

samantha

சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், கடைசியாக யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் யசோதா திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சுகுந்தலம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேநேரம் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வந்தார்.  இதையடுத்து மயோசிட்டிஸ் என்ற தசை அயற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்து வருகிறார். 

samantha

கடந்த சில மாதங்களாக சிகிச்சை இருந்த சமந்தா, உடல் நிலை தேறி வருகிறார். விரைவில் குஷி படப்பிடிப்பில் இணையவுள்ள நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு நடந்தே சென்று 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். இதையடுத்து முருகனை மனம் உருக வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்பிவிட்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  

Share this story