வெறித்தனமாக வெர்க் அவுட் செய்யும் சமந்தா... சிக்ஸ்பேக் ஹீரோக்களுக்கோ டஃப் கொடுப்பாங்க போல... ‌‌

samantha

நடிகை சமந்தா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  

 தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகைகள் இருந்த போதிலும் சமந்தாவிற்கென்று ஒரு தனி மவுசு இருக்கிறது. அதனால்தான் எப்போதும் சினிமாவில் சமந்தா தனியாக தெரிகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படமும் தனி கவனம் பெறுகிறது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்தவரும் சமந்தா, கடைசியாக 'யசோதா' திரைப்படத்தில் நடித்திருந்தார். 

samantha

இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த 'சகுந்தலம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' மற்றும் ஒரு வெப் தொடர் ஒன்றில் நடித்து வந்தார். ஆனால் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் அவர் சினிமாவில் இருந்து சில மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது உடல்நலம் தேறி வரும் சமந்தா, மீண்டும் புதிய படங்களில் நடித்து வருகிறார். 

samantha

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சிக்ஸ் பேக் கட்டுடன் சமந்தா இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

Share this story