‘வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவது அல்ல‘.. வெர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட சமந்தா !

samantha

கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வந்த அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சினிமாவிற்கு சிறிது காலம் ப்ரேக் எடுத்துள்ளார். 

samantha

அதாவது அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை தோல் வியாதி வந்துள்ளது. இதற்கான சிகிச்சையில் சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படத்திற்கு கூட ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு டப்பிங் கொடுத்தார். அதேநேரம் பட ப்ரோமோஷன்களில் மிகவும் சோர்வுடன் கலந்துக்கொண்டார். இதனால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என பல வதந்திகள் பரவி வந்தது. 

samantha

தற்போது இந்தியில் உருவாகும் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது உடல் நிலை குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், நான் ஆட்டோ இம்யூன் டயட் என்ற டயட்டில் இருக்கிறேன். இந்த டயட் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அது என்னவெனில், வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவது அல்ல...நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதுதான் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா பழைய நிலைமைக்கு வந்துவிட்டார் என்று உற்சாகமடைந்துள்ளனர். 

 

Share this story