வெள்ளை தேவதையாக மாறிய சம்யுக்தா.. தனுஷ் பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

samyuktha

 நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

samyuktha

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் எப்போதும் நல்ல வரவேற்பை பெறுகின்றனர். ஏற்கனவே பல நடிகைகள் இப்படி வெற்றிக்கண்டுள்ள நிலையில்  புதிய வரவாக வந்திருப்பவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாளத்தில் ‘பாப்கார்ன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமானார். 

samyuktha

இதைத்தொடர்ந்து  தமிழில் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருகிறது. சினிமா படங்களை தவிர வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். தனது திறமையால் தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் வாய்ப்புகள் தேடி வருகிறதாம். 

samyuktha

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமாவில் ஒரு பக்கம் பிரபலமடைந்து வரும் சம்யுக்தா, தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் வெள்ளை உடையில் மின்னும் தேவதை போன்று இருக்கும் புகைப்படங்களை சம்யுக்தா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

samyuktha

Share this story