சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... இதயம் கொள்ளை கொள்ளும் அழகில் சம்யுக்தா மேனன்!
நடிகை சம்யுக்தா மேனனின் சமீபத்திய கண்கவரும் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
தற்போது மலையாள நடிகைகள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர். சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா மேனன், வரிசையில் தற்போது நடிகை சம்யுக்தா மேனனும் தெலுங்கில் கவனம் பெறத் துவங்கியுள்ளார்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்திலும் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது மகேஷ் பாபூ உடனும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்யுக்தா மேனன் தமிழில் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருகிறது. சினிமா படங்களை தவிர வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.

சம்யுக்தா மேனன் போட்டோஷூட் பிரியர். எனவே அவரது போட்டோஷூட் புகைப்படங்களை நாம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் காணமுடியும். தற்போது சம்யுக்தா ஹோம்லி லுக்கில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.






