தரதரவென இழுத்து சென்ற கணவர் குறித்து விளக்கம் கொடுத்த சிம்பு பட நடிகை.

photo

குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று முன்னணி நடிகராக வலம்வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் எக்கசக்கமான படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த வகையில் வெளியான திரைப்படம்  ‘சிலம்பாட்டம்’. சிம்பு, சினேகா, சானாகான், சந்தானம், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலமாகதான் சானாகான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தமிழ் உட்பட இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

photo

இந்த நிலையில்  இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்துக்கொண்டு தான் முஸ்லீம் மதத்திற்கு மாறியதை அறிவித்தார். அதனை தொடர்ந்து தொழில் அதிபர் ஒருவரையும் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சினிமாவில் இல்லை என்றாலும் கூட சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்

photo

இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் சனா கான் மும்பையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்துக்கொண்டிருந்துள்ளார், அந்நிகழ்ச்சியில் அவரது கணவர் சானாகானின் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானதுஇதனைப்பாரத்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் மனைவியை இப்படியா இழுத்து செல்வது என கண்டனங்கள் வெளிப்படுத்தினர்இதனை பார்த்த சானாகான், ”நாங்கள் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் கார் டிரைவரை அழைக்க முடியவில்லை, கூட்டம் அதிகமாக இருந்தது. நான் வெகு நேரமாக காத்திருந்ததில் சோர்வாக  உணர்ந்தேன். இதனால் தண்ணீர் குடிக்கவும், காற்று வாங்கவும் என்னை அங்கிருந்து அவசரமாக காருக்கு அழைத்து சென்றார் எனது கணவர். எனக்காக கவலைப்பட்டத்திற்கு நன்றிஎன அந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

 

Share this story