முதன்முறையாக கேங்ஸ்டராக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன்!
நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது புதிய படத்தில் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். இந்நிலையில் தற்போது புதிய படத்தில் அவர் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நான் சரண்யா ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதை உடைக்க விரும்பினேன், அதனால்தான் நான் அந்த கதாபாத்திரத்திற்காக சரண்யா மேடத்தை அணுகினேன். அவர் ஒரு பல்துறை நடிகை, அவர் திரைக்கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று நான் உணர்ந்தேன்,” என்கிறார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன். இவர் பிரபுதேவாவின் ஊமை விழிகள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ராஜ் வர்மா வில்லனாகவும், அம்சத் கான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் வன்முறையில் ஈடுவதை நிறுத்திய ஒரு கும்பலைச் சுற்றி நடக்கும் இந்தப் படம் சென்னையை கதைக்களமாக கொண்டுள்ளது. தன்னுடைய குரம்பத்தினருக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது சரண்யா பொன்வண்ணன் மீண்டும் தனது கேங்ஸ்டர் வழியை கையில் எடுக்கிறார்.
“படத்தில் ஒரு முக்கிய படப்பிடிப்பு காட்சி உள்ளது. இதைப் பற்றி நான் அவரிடம் சொன்னபோது, முதலில் அவர் தயங்கினாள். அந்தக் காட்சியில் நடிக்க பயந்தார். ஆனால் அந்தக் காட்சி படமாக்கிய போது அனுபவசாலி போல கையில் துப்பாக்கியை பிடித்திருந்தார். அவர் காட்சிகளை தனது திறமையால் மெருகேற்றினார்." என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

