ஏன் இப்படி கேவலமாக பார்க்குறீர்கள் ?... சரண்யா பொன்வண்ணனை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் !

சிறிய படங்களின் ப்ரோமோஷன்களுக்கு சரண்யா பொன்வண்ணன் போன்ற நடிகைகள் வருவதில்லை என தயாரிப்பாளர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். அவர் கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் கமிட்டானார். அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் கதை சரண்யா பொன்வண்ணனை சுற்றியே அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சரண்யா பொன்வண்ணன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வருத்தமடைந்த தயாரிப்பாளர், தனது வேதனையை பகிர்ந்தார். அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரண்யா பொன்வண்ணன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வராமல் தவிர்த்திருப்பது சரியானதல்ல.
இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு காலில் விழும் அளவிற்கு அழைத்ததாகவும், அதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருப்பதால் வர இயலாது என கூறிவிட்டார். இதுவே சூர்யா, தனுஷ் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் ப்ரோமோஷன் என்ற இப்படி தவிர்த்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
எங்களை போன்ற சிறிய தயாரிப்பாளர்களை மிகவும் கேவலமாக பார்க்கிறீர்கள். எவ்வளவு தான் நசுக்கிறீர்கள் பார்ப்போம் என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார். புதுமுக தயாரிப்பாளர் இந்த பேச்சு தமிழ் சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.