பிரபாசின் `ஸ்பிரிட்' படத்தில் நடிகை திருப்தி டிம்ரி...!

tripti

அனிமல் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை திரிப்தி திம்ரி ஸ்பிரிட் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இரண்டு படங்களும் இந்தியளவில் பேசப்பட்டதால் முக்கியமான இயக்குநராகியுள்ளார். இவர் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' என்கிற படத்தை இயக்குகிறார். மிகப்பெரிய வன்முறைப் படமாக இது இருக்கும் என வங்கா தெரிவித்திருந்தார்.tripti

இதில் வில்லனாக பிரபல கொரியன் நடிகர் மா - தாங் சியோக் நடிக்கிறார். நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், அனிமல் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்த திரிப்தி திம்ரி ஸ்பிரிட் படத்திலும் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this story