நடிகை சாயிஷாவில் அசத்தல் நடனம்.. வைரலாகும் வீடியோ..!

sayeesha

நடிகை சாயிஷாவின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

2015-ல் வெளியான ‘அகில்’ தெலுங்கு படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சாயிஷா. 2016-ல் வெளியான ‘ஷிவாய்’ இந்திப் படத்தில் நடித்தார். அடுத்த ஆண்டு வெளியான ‘வனமகன்’ படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’ என தொடர்ந்து படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை சாயிஷா திருமணம் செய்துக்கொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு சாயிஷா, ஆர்யாவுடன் இணைந்து ‘டெடி’ படத்தில் நடித்தார். 

அதன் பிறகு படங்களில் நடிக்காதவர் 2023-ல் வெளியான ‘பத்து தல’ படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தார். நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சாயிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது நடன வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ரேஸ் 2’ படத்தில் இடம்பெற்ற ’லாட் லக் கையி’ பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story