மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ்

Manju warrior
அசுரன், துணிவு திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில், "மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த Footage படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு  நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது. அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது . ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று சீத்தல் தெரிவித்துள்ளார்.

Share this story