நடிகை சீதாவின் தாயார் காலமானார்

seetha

நடிகை சீதாவின் தாயார் காலமானார். நடிகை சீதா கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் ராம்கி, பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதேசமயம் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட சீதா சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரை பிரிந்து சென்றார். அடுத்தது சீரியல் நடிகர் சதீஷை மணந்து அவரிடமும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றார். இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார் சீதா. இந்நிலையில் இவர் சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தாயார் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சீதா நேற்று (ஜனவரி 3) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த திரைத்துறையினர் சீதாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை சீதா தனது தாயின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு என் சாமி என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவினை அவர் வெளியிட்டிருந்த சில நாட்களுக்குள் அவரது வீட்டில் இந்த சோகம் நிகழ்ந்திருப்பது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Share this story