சொகுசு கார் வாங்கிய ஷாலு ஷம்மு.. உன்னால மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது ?
கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 ஆகியே படங்களில் நடித்தார். இந்த படங்களுக்கு பிறகு சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வாய்ப்புகளை தொடர்ந்து தேடி வருகிறார்.
இதற்கிடையே தொடர்ந்து உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இந்நிலையில் Jaguar F Pace சொகுசு கார் ஒன்றை நடிகை ஷாலு ஷம்மு வாங்கியுள்ளார். இதன் விலை சுமார் 45 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மாக்கெட்டே இல்லாத இருக்கும் ஷாலு ஷம்மு இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளதை பார்த்து வாய் பிளக்க வைத்துள்ளது.