‘திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்’- நடிகை ஷீலா.
வளர்ந்து வரும் நடிகை ஷீலா, தனது கணவரை பிரிந்துள்ளார். அதனை அவரே தனது சமூகவலைதள பக்கம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.
சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஷீலா. இவர் டூ லெட், திரௌபதி, மண்டேலா, பிச்சைக்காரன்2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் கும்பலாங்கி நைட்ஸ் என்ற மலையாள படத்திலும் நடித்து பிரபலமானவர் அதிலும் மண்டேலா படத்தில் யோகிபாபுவுடன் எதார்த்தமாக நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் இவர் திரைப்பட உதவி இயக்குநர் சோழன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது கணவரை பிரிவதை சமூக வலைதளம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
— Sheela (@sheelaActress) December 2, 2023
நன்றியும் அன்பும் @ChozhanV
அதாவது அவரது வலைதள பக்கத்தில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும்’ என அவரது கணவரை டேக் செய்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.