மெழுகு டாலு நீ... க்யூட் லுக்கில் ஷெரீன் !

sherin

நடிகை ஷெரீன் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

sherin

கடந்த 2002ம் ஆண்டு செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரீன். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்த அவர், முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். 

sherin

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். அழகான கண்கள், கவர்ந்திழுக்கும் பார்வையால் இன்றைக்கும் இளம் ரசிகர்களை தன்னுள் கட்டிப்போட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மீண்டும் புகழ்பெற்றார். நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். 

sherin

இதற்காக புதிய போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இளமை ததும்ப ததும்ப உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

sherin

Share this story