கவர்ச்சியை தூக்கலாக காட்டும் ஷில்பா மஞ்சுநாத்.. புகைப்படங்கள் வைரல்
நடிகை ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். விஜய் ஆண்டனி ‘காளி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹரிஷ் கல்யாண் உடன் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நடித்தார். இதையடுத்து தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் நடராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தவிர வேற எந்த படமும் கைவசம் இல்லாததால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஏற்கனவே விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை தற்போது ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.