‘சூர்யா 44’ படத்தில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா…

shirya

சூர்யா நடிப்பில் சமீபத்தில் கங்குவா எனும் திரைப்படம் வெளியானது. அதேசமயம் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடிக்க முடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்து நிலையில் படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி ஏற்கனவே இந்த படம் கேங்ஸ்டர் படம் இல்லை என்றும் இது கார்த்திக் சுப்பராஜ் ஸ்டைலில் உருவாகும் காதல் திரைப்படம் என்றும் சொல்லப்பட்டது.

shirya

மேலும் நடிகர் சூர்யா இப்படத்தில் இரண்டு மிதமான லுக்கில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. அடுத்தது புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அதாவது சூர்யா 44 படத்தில் இடம் பெறும் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடி இருக்கிறாராம். இதனை ஸ்ரேயாவே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். எனவே சந்தோஷ் நாராயணனின் இசையில் வைரல் பாடல் ஒன்று தயாராகி வருகிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.நடிகை ஸ்ரேயா, ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து சிவாஜி, விஜயுடன் இணைந்து அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் இணைந்து கந்தசாமி போன்ற படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story