கூலி படப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதிஹாசன்...!
1738917608636

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி."
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கூலி படப்பிடிப்பிற்காக இன்று சென்னை வந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.