திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்

sruti

திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியொன்றில், “திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இப்போது அளித்துள்ள பேட்டியொன்றில், திருமணம் குறித்து அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா என்று ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.sruthi

அதற்கு ஸ்ருதிஹாசன், “திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப் பிடிக்கும். வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது. ஆகையால் திருமணம் எனக்கு தெரியவில்லை. எனக்கு ரிலேஷன்ஷிப் பிடிக்கும், ரொமான்ஸ் பிடிக்கும். நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை விரும்புகிறேன். யாரிடமாவது என்னை மிகவும் இணைத்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.sruthi

தற்போது ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும், பிரபாஸ் உடன் ‘சலார் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story