அழகே...அழகே... நடிகை சித்தி இத்னானியின் அழகிய புகைப்படங்கள் !
அழகிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சித்தி இத்னானி வெளியிட்டுள்ளார்.
இளம் நடிகையாக சினிமாவில் வலம் வருகிறார் சித்தி இத்னானி. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மும்பையில் பிறந்த இவர், மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர். கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான ‘ஜம்ப லகிடி பம்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு சுமந்த் அஸ்வின் மற்றும் நந்திதா ஸ்வேதா இணைந்து நடித்த ‘பிரேம கத சத்திரம்’ படத்தில் நடித்துள்ளார். அதேபோன்று குஜராத்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சித்தி இத்னானிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழில் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கன்னாங்குழி அழகில் சிரிக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.