'குட் பேட் அக்லி' படத்தின் BTS காட்சிகளை பகிர்ந்த நடிகை சிம்ரன்...!

good bad ugly

அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் BTS காட்சிகளை நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார். 

 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியானது. தற்போது வரை 100 கோடி வசூலை கடந்துள்ளது. https://x.com/SimranbaggaOffc/status/1912053801541837043


அண்மையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சிம்ரன் பதிவிட்டிருந்தார். அதில், “கேமியோ ரோலிற்காக உள்ளே வந்தேன், ஆனால் அனைவரது அன்பையும் பெற்று வெளியே வந்திருக்கிறேன். அஜித்துடன் மீண்டும் இணைந்தது ஒரு அற்புதமான அனுபவம். ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் கலகலப்பான அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தின் BTS காட்சிகளை நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார். 
 

Share this story