மாய கண்ணால் மயக்கும் சோபிதா துலிபாலா.. இணையத்தை கலக்கும் போட்டோஷூட் !

Sobhita Dhulipala

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. 

Sobhita Dhulipala

தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அவர், மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2013-ஆம் ஆண்டு மிஸ் எர்த் பட்டம் வென்றார். அதன்பிறகு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்றார். 

Sobhita Dhulipala

மும்பையில் பிரபல பல்கலை கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை பயின்ற அவர், அதன்பிறகு சினிமாவிற்குள் அடியெடித்து வைத்தார். முதன்முதலில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ‘ராமன் ராகவ்’ என்ற அதிரடி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

Sobhita Dhulipala

பின்னர் தெலுங்கில் ‘குட்டாச்சாரி’, அமேசான் ப்ரைம் வெளியான ‘மேட் இன் ஹெவன்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா துலிபாலா, கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

Sobhita Dhulipala

 

Share this story