வில்லியாகும் விஜய் பட ஹீரோயின்... என்ன படம் தெரியுமா ?

sonia agarwal

 பிரபல நடிகையான சோனியா அகர்வால் புதிய படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். 

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் உடன் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

sonia agarwal

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,  கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2006-ல் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாக 4 ஆண்டுகளில், அதாவது  2010 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘என்னால் உன்னால்’. ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தி நடிகை சோனியா அகர்வால் வில்லியாக நடிக்கவுள்ளாராம். முதல்முறையாக வில்லியாக நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story