புத்தகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை... போனி கபூர் அறிவிப்பு !

sridevi

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார். 

 தனது நடிப்பாலும் ,அழகாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தனது நான்கு வயதில் துனைவன் என்ற பக்தி படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பணியாற்றினார். பின்னர் ஸ்ரீதேவி, தனது கடின உழைப்பால் வெற்றி பெற்று பாலிவுட்டின் லேடி அமிதாப் என்ற பெயரைப் பெற்றார்.

sridevi

ஸ்ரீதேவி பாலிவுட்டில் மட்டுமல்ல, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். கமல் என்றாலே அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவிதான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்தது. தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு போன ஸ்ரீதேவி அங்கு கொடி கட்டிப் பறந்தார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஸ்ரீதேவி தன்னுடைய நடனத்திற்கும் பேர் போனவர். 

sridevi

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரீதேவி, கடந்த 2018-ஆம் ஆண்டு காலமானார். ஸ்ரீதேவி துபாயில் உள்ள தனது ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கடந்த 1996-ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளி வரவிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை போனி கபூர் இன்று வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை பிரபல எழுத்தாளர் தீரஜ்குமார் எழுதியுள்ளார். 


 

 

 

Share this story