ஸ்ரீபிரியா வீட்டில் நடந்த சோகம்- தேம்பி தேம்பி அழும் ஸ்ரீ.

photo
நடிகை ஸ்ரீ பிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரி இன்று காலமானார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. குறிப்பாக  70 மற்றும் 80 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ பிரியா, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலிலும்  ஈடுபட்டு வருகிறார்.

photo

இந்த நிலையில் இன்று நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரி உடல் நலக்குறைவு  காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது  88. இவர் ‘காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். அது மட்டுமல்லாமல் ‘நீயா’ மற்றும் ‘நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களையும்  தயாரித்துள்ளார்.

photo

கிரிஜா பக்கிரி வயது மூப்பு காரணமாக இன்று மைலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில்  இயற்கை எய்தியுள்ளார். ஸ்ரீபிரியா தன்னுடைய தாயாரின் மறைவால் மிகவும் மனமுடைந்துள்ளார்.இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் என பலருமே இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Share this story