க்யூட் லுக்கில் அசத்தும் சிருஷ்டி டாங்கே... இணையத்தை கலக்கும் போட்டோஷூட் !

srushti dange

 சிருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  

srushti dange

தமிழில் ‘காதழகி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து மேகா, டார்லிங், கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில்  நடித்தார். சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.

srushti dange

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த அவர்,  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சர்வைவல்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது திரைப்படங்கள் எதுவும் இல்லாததால் புதிய பட வாய்ப்பாக காத்திருக்கிறார். அதேநேரம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கவுள்ளார்.  

srushti dange

இந்நிலையில் சமீபகாலமாகத் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் தற்போது க்யூட் லுக்கில் இருக்கும் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 

srushti dange

Share this story