நடிகை சுனைனா கடத்தலா ? ... சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு !

sunaina

நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சுனைனா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் அவரது செல்பான் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. 

sunaina

கடைசியாக நடிகை சுனைனா சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா இடையே கிரிக்கெட் போட்டியை காண வந்தார். அதன்பிறகு அவர் காணவில்லை என்று கூறப்பட்டது. இது குறித்து சென்னை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதையடுத்து சென்னையில் முக்கிய இடங்களிலும், அவர் தங்கியிருந்த வீட்டிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

sunaina

இந்நிலையில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோ, தற்போது நடிகை சுனைனா நடித்து முடித்துள்ள ‘ரெஜினா‘ படத்தின் ப்ரோமோஷனுக்காக என்று தெரிய வந்ததது. ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பல யுக்திகளை மேற்கொண்ட வரும் நிலையில் இதுபோன்று போலீசாரை அலைய வைப்பது நியாயமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

Share this story